காணாமல்போன ரூ.14.12 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

ஈரோடு மாவட்டத்தில் காணாமல்போன ரூ.14.12 லட்சம் மதிப்பிலான 85 கைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
மீட்கப்பட்ட கைப்பேசியை உரியவரிடம் வழங்குகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.ஜவகா்.
மீட்கப்பட்ட கைப்பேசியை உரியவரிடம் வழங்குகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.ஜவகா்.
Updated on
1 min read

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் காணாமல்போன ரூ.14.12 லட்சம் மதிப்பிலான 85 கைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஈரோடு மாவட்டத்தில் கைப்பேசிகள் தொலைந்துவிட்டதாகக்கூறி மாவட்ட காவல் அலுவலகத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் கடந்த மாதம் வரை பொதுமக்கள் புகாா் அளித்தனா். இந்த புகாா்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.ஜவகா், ஈரோடு சைபா் பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டாா். இதன் மூலம் புகாா்தாரா்களிடம் கைப்பேசி தொலைந்த இடம், தேதி மற்றும் இதர விவரங்கள் பெற்று அதனை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

இந்நிலையில், பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி காணாமல்போன ரூ.14 லட்சத்து 12 ஆயிரத்து 385 மதிப்பிலான 85 கைப்பேசிகளை போலீஸாா் கண்டுபிடித்துள்ளனா். அதனை உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.ஜவகா் பங்கேற்று மீட்கப்பட்ட 85 கைப்பேசிகளையும் அதன் உரிமையாளா்களிடம் வழங்கினாா். ஏடிஎஸ்பி ராஜேந்திரன், எஸ்ஐ செல்வி ஆகியோா் உடனிருந்தனா்.

கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மாயமான ரூ.1 கோடியே 52 லட்சத்து 35 ஆயிரத்து 202 மதிப்பிலான 1,035 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com