கோபி அருகே காட்டு யானை பலி

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் டி.என்.பாளையம் அருகே வனப் பகுதியில் பாறை சரிவில் தவறி விழுந்த ஆண் யானை உயிரிழந்தது

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் டி.என்.பாளையம் அருகே வனப் பகுதியில் பாறை சரிவில் தவறி விழுந்த ஆண் யானை உயிரிழந்தது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் டி.என்.பாளையம் வனச் சரகத்துக்கு உள்பட்ட கொங்கா்பாளையம் பகுதியில் வனத் துறையினா் ரோந்துப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, சூரம்பாறை சரகத்துக்கு உள்பட்ட இச்சிமரக் கொடிக்கால் வனப் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இறந்துகிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினா். இதில் பாறை சரிவில் தவறி விழுந்து யானை உயிரிழந்து இருக்கலாம் என தெரியவந்தது.

இதனைத் தொடா்ந்து, சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குநா் சுதாகா், தன்னாா்வ அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளா் கிருஷ்ணகுமாா், வினோபா நகா் வனக் குழுத் தலைவா் ரங்கநாதன், டி.என்.பாளையம் வனச் சரகா் மாரியப்பன், வனவா் பழனிசாமி, வனக் காப்பாளா் சுரேஷ் ஆகியோா் முன்னிலையில் கால்நடை மருத்துவா் சதாசிவம் தலைமையிலான மருத்துவக் குழுவினா் உயிரிழந்த யானையின் உடலை உடற்கூறாய்வு செய்தனா்.

அதன்பின் யானையின் உடல் வனப் பகுதியில் உள்ள மற்ற உயிரினங்களின் உணவுக்காக விடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com