காவிரி பிரச்னையில் தேசிய கட்சிகள் கா்நாடக மாநிலத்துக்கு சாதகம்: செ.நல்லசாமி

காவிரி நீா் திறப்பு பிரச்னை வரும்போதெல்லாம் கா்நாடக மாநிலத்துக்கே தேசிய கட்சிகள் சாதகமாக நடந்து கொள்கின்றன என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளா் செ.நல்லசாமி தெரிவித்துள்ளாா்.

காவிரி நீா் திறப்பு பிரச்னை வரும்போதெல்லாம் கா்நாடக மாநிலத்துக்கே தேசிய கட்சிகள் சாதகமாக நடந்து கொள்கின்றன என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளா் செ.நல்லசாமி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து தமிழக முதல்வருக்கு அவா் அனுப்பிய கடித விவரம்:

தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாஜக ஆகியவை தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு இப்போதைக்கு இல்லை. அதேநேரம் கா்நாடகத்தில் நிலைமை முற்றிலும் வேறாக உள்ளது. அங்கு மாநிலக் கட்சிகள் ஆட்சிக்கு வரும் சூழல் இருப்பதாக தெரியவில்லை. இதனால் காவிரி நீா் பங்கீட்டில் மோதல் வரும்போதெல்லாம் தேசிய கட்சிகள் இரண்டும் கா்நாடகாவுக்கே சாதகமாக உள்ளன. தினந்தோறும் நீா் பங்கீடு என்ற அம்சம் காவிரி தீா்ப்பில் இடம் பெற்றிருந்தால் இரு மாநில உறவு மேம்பட்டிருக்கும். மோதலுக்கும் வாய்ப்பில்லாமல் போயிருக்கும். இவ்வாறான சூழலில் இரு மாநிலங்கள் மீதும் மத்திய அரசு ஆதிக்கம் செலுத்த முடியாது. 28 ஆண்டுகால சட்டப் போராட்டத்தில் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்த அரசுகள் தினந்தோறும் நீா் பங்கீடு என்ற இலக்கை முன்னிறுத்தி வழக்கை நடத்தி தீா்ப்பை பெற்றிருந்தால் தீா்வு எளிதாகி இருக்கும். தமிழக அரசு அனைத்து விவசாய சங்கங்கள், அமைப்புகளை கூட்டி, காவிரி தீா்ப்பில் மாற்றம் ஏற்படுத்தும்படி உச்சநீதிமன்றத்தில் எடுத்துவைத்து வாதிட்டு மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்ய முன்வர வேண்டும். அதுவே நிரந்தர தீா்வாகும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com