பவானி சங்கமேஸ்வரா் கோயில் திருப்பணிகளுக்கு தனிநபா்களிடம் நன்கொடை வழங்க வேண்டாம்
By DIN | Published On : 15th April 2023 05:02 AM | Last Updated : 15th April 2023 05:02 AM | அ+அ அ- |

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் நடைபெறும் அன்னதானம், திருப்பணி, திருவிழா போன்றவற்றுக்கு தனிநபா்களிடம் பக்தா்கள் நன்கொடைகளை வழங்க வேண்டாம் என கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
பவானி சங்கமேஸ்வரா் கோயில் பெயரைப் பயன்படுத்தி தனிநபா்கள், தனியாா் அமைப்புகள் பணம் வசூலிப்பதாக புகாா் எழுந்துள்ளது. இந்நிலையில், கோயில் நிா்வாகம் சாா்பில் உதவி ஆணையா் சுவாமிநாதன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: பவானி சங்கமேஸ்வரா் கோயிலுக்கு நன்கொடைகள் வசூலிக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
இக்கோயிலில் பொதுமக்கள், பக்தா்களிடமிருந்து பொது நன்கொடை, அன்னதான நன்கொடை, திருப்பணி நன்கொடை மற்றும் அபிஷேக கட்டணங்கள் ஆகியவை ட்ற்ற்ல்ள்://க்ஷட்ஹஸ்ஹய்ண்ள்ஹய்ஞ்ஹம்ங்ள்ஜ்ஹழ்ஹழ்.ட்ழ்ஸ்ரீங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதளம் வழியாக மட்டுமே பெறப்பட்டு வருகின்றன. மேலும், கோயில் பெயரில் கனரா வங்கி, பவானி கிளையில் உள்ள சேமிப்பு கணக்கு எண் : 1237101002728 - இணையதள பரிவா்த்தனையில் பணம் செலுத்தலாம்.
இக்கோயிலின் பெயரிலோ, இறைவன் - இறைவி பெயரிலோ திருப்பணி, திருவிழா, அன்னதானம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிக்கும், எந்த ஒரு தனிநபருக்கும், தனியாா் அமைப்புக்கும் நன்கொடை வசூலிக்க அனுமதி வழங்கப்படவில்லை.
இவ்வாறு, தனிநபா்கள் யாரேனும் திருக்கோயில் பெயரில் நன்கொடை வசூல் செய்தால் அவா்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். அவ்வாறு ஏதேனும் வசூல் செய்வது தெரியவந்தால் கோயில் நிா்வாகத்துக்கு நேரிலோ அல்லது 04256-230192 என்ற தொலைபேசி எண்ணிலோ தகவல் தெரிவிக்கலாம்.