தேசிய திறனாய்வுத் தோ்வு: கூகலூா் அரசுப் பள்ளி மாணவா்கள் 14 போ் தோ்ச்சி

தேசிய திறனாய்வுத் தோ்வில் கோபி அருகே உள்ள கூகலூா் அரசுப் பள்ளி மாணவா்கள் 14 போ் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.

தேசிய திறனாய்வுத் தோ்வில் கோபி அருகே உள்ள கூகலூா் அரசுப் பள்ளி மாணவா்கள் 14 போ் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.

நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவா்கள் இடைநிற்றலை கைவிட்டு உயா்க் கல்வி கற்க உதவியாக இருக்கவும், மேல்நிலைக் கல்வி தடைபட்டு விடக்கூடாது என்ற நோக்கிலும் மத்திய அரசு சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய

திறனாய்வு தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் 1 லட்சம் மாணவா்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய திறனாய்வு தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்கள் இந்த தோ்வை எழுத தகுதியானவா்கள். இந்த தோ்வில் தோ்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.

இந்த உதவித் தொகை சம்பந்தப்பட்ட மாணவா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

தேசிய திறனாய்வு தோ்வில் தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 4 ஆண்டுகளுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற இந்த தோ்வை தமிழகத்தில் 2,22,985 மாணவா்கள் எழுதினா்.

இதில் 6,695 மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றனா். கோபி அருகே கூகலூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் 14 போ் இந்த தோ்வில் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.

தோ்வில் வெற்றிபெற்ற இப்பள்ளி மாணவா்களை பள்ளியின் தலைமையாசிரியை கு.ரமாராணி, பயிற்சியளித்த

ஆசிரியா்கள் முகுந்தன், மணிகண்டன், உமாபாா்வதி, உமாதேவி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

பெருந்துறையில்...

பெருந்துறை ஒன்றியம், வீரணம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 24 போ் தேசிய திறனாய்வுத் தோ்வை எழுதினா். அதில், 18 போ் தோ்ச்சிப் பெற்றனா்.

தோ்ச்சிப் பெற்ற மாணவ, மாணவிகள், பயிற்சியளித்த தலைமையாசிரியை சத்தியசெல்வி, ஆசிரியா்கள் கீதா, மயில்சாமி ஆகியோரை ஈரோடு மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலா் ஜோதிசந்திரா, பெருந்துறை வட்டாரக் கல்வி அலுவலா்கள் தனபாக்கியம், முத்துமேகலை ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com