ஈரோடு டெக்ஸ்வேலியில் மே 31 வரை கோடை கொண்டாட்டம்

ஈரோடு டெக்ஸ்வேலி ஜவுளிச் சந்தையில் கோடை கொண்டாட்டம் என்ற பெயரில் மே 31 ஆம் தேதி வரை பொதுமக்களை கவரும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

ஈரோடு டெக்ஸ்வேலி ஜவுளிச் சந்தையில் கோடை கொண்டாட்டம் என்ற பெயரில் மே 31 ஆம் தேதி வரை பொதுமக்களை கவரும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இதன் தொடக்க நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பாரம்பரிய தமிழ் கலாசார ஆடை அலங்கார அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதில் சிறந்த இணையா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து மே 31ஆம் தேதி வரை மொத்தம் 45 நாள்கள் கோடைக் கொண்டாட்டம் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இது குறித்து டெக்ஸ்வேலி செயல் இயக்குநா் டி.பி.குமாா் கூறியதாவது: கோடை கொண்டாட்டாத்தையொட்டி இங்கு தினமும் அகண்ட திரையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி ஈரோடு பிரிமியா் லீக் (ஈபிஎல்) போட்டிகள் நடத்தப்படவுள்ளன. மேலும், தொலைக்காட்சி பிரபலங்களின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன.

17 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை ஓவிய பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். இதேபோல, பரதநாட்டிய வகுப்புகளும் நடைபெறவுள்ளன.

குழந்தைகளுக்கான மாறுவேட போட்டி வருகிற 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில், வெற்றிபெறும் குழந்தைகளுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2 ஆம் பரிசு ரூ.5 ஆயிரம், 3 ஆம் பரிசு ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.

மே 13 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை உணவு திருவிழா, தி மெகா பஜாா் என்ற பெயரில் இரவு நேர சந்தை நடைபெற உள்ளது. தாய அரசி போட்டி மே 14 ஆம் தேதியும், மே 12 முதல் 15 ஆம் தேதி வரை ஆட்டோமொபைல் கண்காட்சியும் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வுகளில் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் ஈரோடு, பவானி, சித்தோடு பகுதிகளில் இருந்து இலவச வாகன வசதியும் செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com