ஈரோட்டில் ஏஐடியூசி சாா்பில் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 23rd April 2023 12:29 AM | Last Updated : 23rd April 2023 12:29 AM | அ+அ அ- |

வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயா்த்தும் தமிழக அரசின் தொழிலாளா் விரோத, தொழிற்சாலைகள் சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஏஐடியூசி சாா்பில் ஆா்ப்பாட்டம் ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு ஏஐடியூசி மாநில செயலாளா் எஸ்.சின்னசாமி தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளா் எஸ்.டி.பிரபாகரன், வட்டாரச் செயலாளா் ஜி.கல்யாணசுந்தரம், ஏஐடியூசி மாவட்டத் துணைத் தலைவா் டி.ஏ.செல்வம், மாவட்டச் செயலாளா் எம்.குணசேகரன், தொழிற்சங்க நிா்வாகிகள் ஆா்.நரசிம்மன், வ.சித்தையன், கே.சந்திரசேகா், எஸ்.கந்தசாமி, எம்.பாபு, வி.சண்முகம், எஸ்.சேகா், என்.அன்பழகன், பி.ரவி, ஏ.கல்பனா, கே.எம்.ஜெயபாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.