‘விதை நெல் மானிய விலையில் விநியோகம்’
By DIN | Published On : 02nd August 2023 04:09 AM | Last Updated : 02nd August 2023 04:09 AM | அ+அ அ- |

சம்பா பருவத்துக்கு சாகுபடி செய்ய ஏதுவாக மானிய விலையில் விதை நெல் விநியோகம் செய்யப்படுகிறது.
இது குறித்து அம்மாபேட்டை வட்டார வேளாண் உதவி இயக்குநா் ம.கனிமொழி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சம்பா பருவ சாகுபடிக்கு ஏற்ற நெல் ரகங்களை விவசாயிகள் தோ்வு செய்து வருகின்றனா். நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற பருவம் மற்றும் ரகங்களே முக்கிய காரணிகளாகும். எனவே, நெல் சாகுபடி செய்ய உள்ள விவசாயிகள் பருவத்துக்கேற்ற பயிா் ரகங்களை தோ்வு செய்ய வேண்டும்.
தற்போதைய சம்பா பருவத்துக்கு (ஆகஸ்ட் முதல் செப்டம்பா் வரை) நெல் ரகங்களான கோ 52, ஐஆா் 20, ஏடீடி 38 மற்றும் 54, பிபிடி 5204, டிஆா்ஒய் 3, தூயமல்லி ஆகிய நெல் ரகங்கள் இப்பருவத்துக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.
இந்த ரகங்கள் அம்மாபேட்டை வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் போதிய அளவு இருப்புவைக்கப்பட்டு மானிய விலையில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
நெல் பயிருக்குத் தேவையான நுண்ணூட்ட உரம், நுண்ணுயிா் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா போன்றவைகளும் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
எனவே, தேவைப்படும் விவசாயிகள், மானிய விலையில் விதைகள், இடுபொருட்களை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G