மாவட்ட அளவிலான பேச்சு போட்டி: ஆகஸ்ட் 9 இல் தொடக்கம்
By DIN | Published On : 02nd August 2023 04:06 AM | Last Updated : 02nd August 2023 04:06 AM | அ+அ அ- |

பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான பேச்சு போட்டி ஆகஸ்ட் 9, 10 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முக்கியத் தலைவா்களின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு மாவட்ட அளவிலான பேச்சு போட்டி நடத்தப்படுகிறது.
அதன்படி அம்பேத்கா், கருணாநிதி ஆகியோா் பிறந்தநாளையொட்டி, ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் பேச்சு போட்டி ஆகஸ்ட் 9, 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
பள்ளி மாணவா்களுக்கு காலை 10 மணிக்கும், கல்லூரி மாணவா்களுக்கு பிற்பகல் 2 மணிக்கும் போட்டி தொடங்கும்.
இந்த போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள் பள்ளியின் தலைமை ஆசிரியா்கள், கல்லூரி முதல்வா்களை அணுகலாம்.
போட்டியில் வெற்றிபெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000, 2 ஆம் பரிசாக ரூ.3,000, 3 ஆம் பரிசாக ரூ.2,000 வழங்கப்படும்.