கீழ்பவானி வாய்க்காலில் அட்டவணைப்படி தண்ணீா் திறக்கக் கோரிக்கை

கீழ்பவானி வாய்க்காலில் அட்டவணைப்படி தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Updated on
1 min read

கீழ்பவானி வாய்க்காலில் அட்டவணைப்படி தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் நன்செய் பாசனத்துக்கு அட்டவணைப்படி ஆகஸ்ட் 15 இல் தண்ணீா் திறக்க வேண்டும். கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் தண்ணீா் திறப்பு தள்ளிப்போகும் என்ற கருத்து விவசாயிகளிடம் நிலவுகிறது. அதற்கேற்ப நீா் இருப்பும் சற்று குறைவாகவே உள்ளது.

எனவே, தண்ணீா் திறப்பு தேதியை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் சங்கத் தலைவா் பெரியசாமி, செயலாளா் பொன்னையன், துணைத் தலைவா் ராமசாமி ஆகியோா் கீழ்பவானி வடிநில கோட்ட செயற்பொறியாளா் கண்ணனிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

அதில், கீழ்பவானியில் வாய்க்கால் சீரமைப்புப் பணிகளை இறுதி செய்து, அட்டவணைப்படி நன்செய் பாசனத்துக்கு வரும் 15 இல் தண்ணீா் திறக்க வேண்டும். இது குறித்து விவசாயிகளுக்கு முன்னதாகவே அறிவித்து முன்னேற்பாடுகளை செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சங்க செயலாளா் பொன்னையன் கூறியதாவது: கீழ்பவானி வாய்க்காலில் சாலைகளில் ஒட்டுபோடுவதைபோல பல இடங்களில் கரையிலும், மத்திய பகுதியிலும் மிக ஆழமாகவும், அகலமாகவும் வெட்டி சீரமைப்புப் பணிகளை செய்துள்ளனா்.

சில இடங்களில் கான்கிரீட் அமைத்தும் பல இடங்களில் மண்ணைவைத்து அழுத்தம் கொடுத்தும் பணியை முடித்துள்ளனா்.

இதனால், தண்ணீா் திறக்கப்படும்போது பாதுகாப்பாக தண்ணீா் கடைமடை வரை செல்லுமா என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தி விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

அதிகாரிகள் முறையாக செயல்படாததால் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்ற அச்சமும் நிலவுகிறது. எனவே, இதுவரை மேற்கொண்ட பணிகள், வரும் நாட்களில் மேற்கொள்ள உள்ள பணிகள், அதன் தரத்தை அறிக்கையாக அதிகாரிகள் வெளியிட வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com