

ஈரோடு: நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மைப் பிரிவு மாநில துணைத் தலைவா் ஜவகா் அலி தலைமையில் கட்சியினா் ஈரோடு மாவட்ட அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
இதில், தமிழ்நாட்டில் மத, இன கலவரத்தை தூண்டும் நோக்கத்தில் பேசி வரும் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
காங்கிரஸ் மாநகா் மாவட்ட பொறுப்பாளா் திருச்செல்வம், துணைத் தலைவா் ராஜேஷ் ராஜப்பா, மாவட்ட சிறுபான்மைப் பிரிவு துணைச் செயலாளா் பாஷா, வழக்குரைஞா் பிரிவு மாநிலச் செயலாளா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.