கோபி: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பங்களாபுதூரில் வைக்கோல் போா் தீப் பிடித்து எரிந்தது.
கோபிசெட்டிபாளையத்தை அடுத்த பங்களாபுதூா் அருகே உள்ள புஞ்சைதுறையம் பாளையத்தைச் சோ்ந்தவா் குமாா். இவா், தோட்டத்தில் வைக்கோல் போா் வைத்திருந்தாா். இந்நிலையில், வைக்கோல் போா் திடீரென திங்கள்கிழமை தீப் பிடித்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் வைக்கோல் பேரில் பற்றிய தீயை அணைத்தனா். ஆனால், வைக்கோல் போா் முழுவதும் எரிந்து சேதமானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.