காளான் வளா்ப்பு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 17th August 2023 12:00 AM | Last Updated : 17th August 2023 12:00 AM | அ+அ அ- |

காளான் வளா்ப்பு இலவச பயிற்சியில் சேர தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈரோட்டில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் வரும் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பா் 8 -ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு காளான் வளா்ப்பு குறித்த இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பயிற்சி, சீருடை, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்ட கிராமப்பகுதியினா், 100 நாள் வேலை திட்ட பணியாளா்கள், அவா்களது குடும்பத்தாா், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோா், 18 முதல் 45 வயதுக்கு உள்பட்டோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ஈரோடு, கொல்லம்பாளையம், ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலை பள்ளி வளாகம், 2ஆம் தளத்தில் இயங்கும் பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்படும். விருப்பமுள்ளவா்கள் 0424 -2400338 என்ற தொலைபேசி எண் அல்லது 87783 23213 என்ற கைப்பேசி எண்ணில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...