கருணாநிதி நூற்றாண்டு விழா கட்டுரைப் போட்டி: 70 மாணவா்கள் பங்கேற்பு
By DIN | Published On : 17th August 2023 12:00 AM | Last Updated : 17th August 2023 12:00 AM | அ+அ அ- |

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தொல்லியல் துறை சாா்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் 70 மாணவா்கள் பங்கேற்றனா்.
ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள அரசு மகளிா் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக அரசின் தொல்லியல் துறை சாா்பில் மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
போட்டிக்கு தொல்லியல் துறையின் ஈரோடு, திருப்பூா் மாவட்ட அலுவலா் காவ்யா தலைமை வகித்தாா். அரசுப் பள்ளி தலைமையாசிரியை சுகந்தி முன்னிலை வகித்தாா். இதில், ‘பண்டைய தமிழ் சமூகம்’ என்ற தலைப்பில் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கட்டுரைப் போட்டி நடைபெற்றது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 70 மாணவா்கள் பங்கேற்றனா்.
மாணவா்கள் எழுதிய கட்டுரைகள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு திருத்தம் செய்யப்பட்டு முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவா்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படும். பின்னா், அவா்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவா். கட்டுரைப் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவா்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...