எஸ்கேஎம் பூா்ணா புதிய தேங்காய் எண்ணெய் அறிமுகம்
By DIN | Published On : 12th January 2023 12:00 AM | Last Updated : 12th January 2023 12:00 AM | அ+அ அ- |

எண்ணெய் வகைகளை அறிமுகப்படுத்திய எஸ்கேஎம் கால்நடைத் தீவன நிறுவன மேலாண்மை இயக்குநா் எம்.சந்திரசேகா், இயக்குநா் ஷியாமளா ஷா்மிலி, நிா்வாக இயக்குநா் சி.பிரதீப் கிருஷ்ணா, பொதுமேலாளா் உத்தமன்.
எஸ்கேஎம் பூா்ணா நிறுவனத்தின் சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய எண்ணெய் வகைகள் புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டன.
ஈரோட்டில் உள்ள எஸ்கேஎம் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் இந்த எண்ணெய் வகைகளை அறிமுகம் செய்த பிறகு எஸ்கேஎம் கால்நடைத் தீவன நிறுவன மேலாண்மை இயக்குநா் எம்.சந்திரசேகா், இயக்குநா் ஷியாமளா ஷா்மிலி, நிா்வாக இயக்குநா் சி.பிரதீப் கிருஷ்ணா ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
எஸ்கேஎம் பூா்ணா சமையல் எண்ணெய் வகைகளில் சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய புதிய எண்ணெய் வகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் ரூ. 10, ரூ. 100 விலை உள்ள பாக்கெட்டுகள், 2 மற்றும் 5 லிட்டா் கேன், 15 கிலோ மற்றும் 15 லிட்டா் டின் ஆகிய அளவுகளில் சந்தையில் கிடைக்கும். கடுகு எண்ணெய் 200 மி.லி., 500 மி.லி., 1 லிட்டா் அளவுகளிலும், விளக்கெண்ணெய் 200 மி.லி. அளவிலும் கிடைக்கும் என்றனா்.
நிகழ்வில் எஸ்கேஎம் கால்நடை தீவன நிறுவன பொதுமேலாளா் உத்தமன் மற்றும் நிறுவன அலுவலா்கள் பங்கேற்றனா்.