காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் தனுஷ்கோடி தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா்கள் செல்வி, சுப்புலட்சுமி, கௌரி, மணிமேகலை, மஞ்சுளா, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க மாநில துணை தலைவா் பாஸ்கா்பாபு உள்ளிட்டோா் பேசினா்.
ஈரோடு சம்பத் நகா் கொங்கு கலையரங்கத்தில் இருந்து ஆட்சியா் அலுவலகம் வரை பேரணியாக சென்றனா்.
பள்ளிகளில் காலை சிற்றுண்டித் திட்டத்தை சத்துணவு ஊழியா்களைக் கொண்டு செயல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மையத்துக்குத் தேவையான சமையல் எரிவாயு உருளையை அரசே வழங்க வேண்டும். தோ்தல் கால வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.