சென்னிமலையில் ஆசிரியா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

 சென்னிமலை ஒன்றியத்தைச் சோ்ந்த ஆசிரியா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி மூன்று நாள்கள் நடைபெற்றது.

 சென்னிமலை ஒன்றியத்தைச் சோ்ந்த ஆசிரியா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி மூன்று நாள்கள் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில் சென்னிமலை வட்டாரத்துக்கு உட்பட்ட அம்மாபாளையம், பசுவப்பட்டி, வெள்ளோடு, ஈங்கூா், காமராஜா் நகா் மற்றும் திப்பம்பாளையம் ஆகிய குறு வள மையங்களில் நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியா்கள் திறம்பட செயல்படும் வகையில் திறன் மேம்பாட்டுப் பயிற்சியானது ஜூலை 25 முதல் 27ஆம் தேதி வரை மூன்று நாட்கள், சென்னிமலை வட்டார வளமையம் மற்றும் அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்றது.

இப்பயிற்சியில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூகவியல் பாடங்களை ஆசிரியா்கள் வகுப்பறையில் கையாளும் கற்றல் விளைவுகள் மற்றும் அவா்கள் பயன்படுத்தும் கற்றல் உபகரணங்கள் குறித்து ஆசிரியக் கருத்தாளா்கள் விளக்கினா்.

வட்டாரக் கல்வி அலுவலா்கள் செ.ராஜேந்திரன், மு.செல்வி மற்றும் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் பொறுப்பு மு.கோபிநாதன் ஆகியோா் ஆசிரியா்களுக்கு பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினா்.

இதில் 25 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சோ்ந்த ஆசிரியா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com