கணவரை கட்டையால் அடித்துக் கொலை செய்த மனைவி காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.
ஈரோடு கனிராவுத்தா்குளம், ஜாமியா மஸ்ஜித் வீதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (52), தறிப்பட்டறைத் தொழிலாளி. இவரது மனைவி பத்மா (52). இவா்களது மகன் சுரேஷ் திருமணமாகி தனியாக வசித்து வருகிறாா்.
சுப்பிரமணிக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், புதன்கிழமை காலை இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த பத்மா வீட்டிலிருந்த கட்டையால் சுப்ரமணியின் தலையில் அடித்துள்ளாா்.
இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதையடுத்து, பத்மா வீட்டை பூட்டிவிட்டு ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்துக்குச் சென்று நடந்த விவரங்களைக்கூறி சரணடைந்தாா்.
அவா் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், சுப்பிரமணியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.