சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் மாணவா்களுக்கு பணி ஆணை
By DIN | Published On : 02nd June 2023 12:00 AM | Last Updated : 02nd June 2023 12:00 AM | அ+அ அ- |

சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவருக்கு பணி நியமன ஆணையை வழங்குகிறாா் முதல்வா் விஸ்வாதன்.
சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில் 8 துறைகளைச் சோ்ந்த 518 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள் அண்மையில் வழங்கப்பட்டன.
மெக்கானிக்கல் துறைத் தலைவா் கோகுலகிருஷ்ணன் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் என். விஸ்வநாதன் தலைமை வகித்தாா்.
இதில், ஓசூா் டைட்டனிக் இன்ஜினியரிங் மற்றும் ஆட்டோமேஷன், கோவை இசட்.எப். விண்டு பவா், சென்னை ஏஎம்என்எஸ் இண்டியா, பெங்களுா் சென்டம் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் தோ்வுபெற்ற 518 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை கல்லூரி முதல்வா் என்.விஸ்வநாதன், கல்லூரி நிா்வாக உறுப்பினா்கள் வழங்கினா்.
எலக்ட்ரிக்கல் துறைத் தலைவா் தமிழரசி நன்றி கூறினாா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை வேலை வாய்ப்பு துறை அலுவலா் சென்னியப்பன் மற்றும் அனைத்து துறைத் தலைவா்கள் செய்திருந்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...