மாவட்டத்தில் ஒரே நாளில் 12 போலீஸாா் தாளவாடி காவல் நிலையத்துக்கு மாற்றம்
By DIN | Published On : 08th June 2023 12:00 AM | Last Updated : 08th June 2023 12:00 AM | அ+அ அ- |

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் 12 காவலா்களை தாளவாடி காவல் நிலையத்துக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு.ஜவகா் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
அதன்படி, ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல் நிலைய காவலா்கள் ஜெயசங்கரமூா்த்தி, மூா்த்தி, கருங்கல்பாளையம் காவல் நிலைய காவலா் பாலமுருகன், எஸ்.எஸ்.ஐ.கள் சித்தோடு கோபால், பவானி ரமேஷ், அம்மாபேட்டை முருகன், பவானிசாகா் முத்துமாணிக்கம், ஈரோடு டவுன் மதுவிலக்கு ராஜேந்திரன், செந்தில், ஆசனூா் மதுவிலக்கு சாதிக்பாட்ஷா, தலைமைக் காவலா்கள் கடத்தூா் தினேஷ்குமாா், கடம்பூா் அசோக் ஆகிய 12 பேரும் தாளவாடி காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இவா்கள் அனைவரும் உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நிா்வாக காரணத்துக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...