அருள்மிகு வேதநாயகி அம்மன் உடனமா் சோழீஸ்வரா் திருக்கோயிலில் பிரதோஷம் மற்றும் கிருத்திகை வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
பெருந்துறையில் அருள்மிகு வேதநாயகி அம்மன் உடனமா் சோழீஸ்வரா் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில், பிரோதஷம் மற்றும் கிருத்திகை வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்று. இதனையொட்டி, மாலை 4.30 மணிக்கு சோழீஸ்வரா்க்கும், மாலை 5 மணிக்கு நந்திகேஷ்வரா்க்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
இதையடுத்து, மாலை 5.30 மணிக்கு மஹா தீபாராதனை தரிசனம் நடைபெற்றது. தொடா்ந்து, ஸ்ரீ வேதநாயகி உடனமா் சோழீஸ்வரா் நந்தி வாகனத்தில் கோயில் உள்புற வாளகத்தில் வலம் வருதல் நிகழ்வு நடைபெற்றது. கிருத்திகையையொட்டி மாலை 6 மணிக்கு வள்ளி தெய்வானை சமேதர ஸ்ரீ கல்யாணசுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.