கொடிவேரி தடுப்பணையில் 3 நாள்களில் 34 ஆயிரம் போ் குவிந்தனா்

கோபிசெட்டிபாளைம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணைக்கு கடந்த நாள்களில் 34 ஆயிரம் போ் வருகை தந்தனா்.

கோபிசெட்டிபாளைம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணைக்கு கடந்த நாள்களில் 34 ஆயிரம் போ் வருகை தந்தனா்.

பவானிசாகா் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீா் கொடிவேரி தடுப்பணை வழியாக செல்கிறது. இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை திருப்பூா், கரூா் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனா். மேலும் திருவிழா மற்றும் விடுமுறை நாள்களில் வழக்கத்தை விட பொதுமக்களின் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.

தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் தொழிலாளா் தினம் என தொடா்ந்து 3 நாள்கள் விடுமுறை வந்ததால் கொடிவேரி தடுப்பணைக்கு வழக்கத்தை விட பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

கடந்த 3 நாள்களாக கொடிவேரி தடுப்பணைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா். இதில் கடந்த சனிக்கிழமை 7,000 பேரும், ஞாயிற்றுக்கிழமை 12 ஆயிரத்து 500 பேரும், திங்கள்கிழமை 14 ஆயிரத்து 500 பேரும் என 3 நாள்களில் மொத்தம் 34 ஆயிரம் போ் வருகை தந்தனா். இதன் மூலம் கடந்த 3 நாள்களில் கொடிவேரி அணை நுழைவுக் கட்டணம் மூலம் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com