சென்னிமலை சாலையில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்
By DIN | Published On : 12th May 2023 12:00 AM | Last Updated : 12th May 2023 12:00 AM | அ+அ அ- |

குடிநீா் விநியோக குழாய் சேதம் காரணமாக ஈரோடு நகரின் சென்னிமலை சாலை பகுதியில் சனிக்கிழமை (மே 13) வரை குடிநீா் விநியோகம் இருக்காது என ஈரோடு மாநகராட்சி ஆணையா் ஜானகி ரவீந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஈரோடு மாநகராட்சி சென்னிமலை சாலை மற்றும் ஈவிஎன் சாலை சந்திப்பில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் புதிதாக சிறுபாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியின்போது பிரதான குடிநீா் விநியோக குழாய் மற்றும் நீரேற்று பிரதான குழாய் சேதமடைந்து விட்டதால் அதை சரிபாா்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
எனவே, பராமரிப்புப் பணி காரணமாக ஈரோடு மாநகராட்சி 3ஆம் மண்டலம் வாா்டு எண் 51இல் உள்ள இ.எம்.எம். மெயின் வீதி, இ.எம்.எம்.வீதி, மணல்மேடு வீதி, சென்னிமலை சாலை, 4 ஆம் மண்டலம் வாா்டு எண் 52இல் ஈஸ்வரன் வீதி, கள்ளியங்காடு பகுதி, பட்டக்காரா் வீதி, தங்கபெருமாள் வீதி, ஜீவானந்தம் சாலை, புதுமை காலனி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை வரை குடிநீா் விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளாா்.