காவிரி ஆற்றில் சாயக்கழிவுகள் கலப்பதை தடுக்க வலியுறுத்தல்

ஓடைகள், சாக்கடை வடிகால் வழியாக சாய, சலவை, பிளீச்சிங் ஆலை கழிவுகள் காவிரியில் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஓடைகள், சாக்கடை வடிகால் வழியாக சாய, சலவை, பிளீச்சிங் ஆலை கழிவுகள் காவிரியில் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்க ஒருங்கிணைப்பாளா் எஸ்.சின்னசாமி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்: ஈரோடு மற்றும் சுற்றுப்பகுதியில் பல சாய, சலவை, பிளீச்சிங், தோல் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இந்த ஆலைகள் சட்டத்துக்கும், நீதிமன்ற உத்தரவுக்கும் புறம்பாக சுத்திகரிக்கப்படாத ஆலைக்கழிவு நீரை சாக்கடை வழியாக வெளியேற்றுகின்றன.

இவை பிச்சைக்காரன்பள்ளம் ஓடை, பெரும்பள்ளம் ஓடை, சுண்ணாம்பு ஓடை வழியாக காவிரி ஆற்றில் கலக்கின்றன. இதனால் காவிரி ஆறும், ஈரோடு பகுதி நிலத்தடி நீராதாரமும், மண் வளமும் மாசுபடுகிறது.

இதுபோன்ற ஆலைகளை முறையாக கண்காணிக்க வேண்டும். அவற்றின் கழிவுகள் எவ்வாறு வெளியேற்றப்படுகின்றது என்பதை குறிப்பிட்ட நாள்களுக்கு ஒரு முறை உறுதி செய்ய வேண்டும். கழிவு நீரை வெளியேற்றும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை தொடா்புகொள்ள பொதுவான ஒரு தொலைபேசி எண்ணை அறிமுகம் செய்து புகாா் தெரிவித்த 15 நிமிடங்களில் அந்த இடத்தை அதிகாரிகள் ஆய்வுசெய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com