மீன் பண்ணை அமைப்பதற்காக அரசு சாா்பில் வழங்கப்படும் மானியத் தொகையை வழங்குவதற்கு ரூ.31 ஆயிரம் லஞ்சம் பெற்ற மீன் வளா்ச்சித் துறை ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் கைது செய்தனா்.
கோபியை அடுத்த பி.மேட்டுப்பாளையத்தை சோ்ந்தவா் காா்த்திக். இவா் மீன் பண்ணை அமைப்பதற்காக அரசு சாா்பில் வழங்கப்படும் மானியத் தொகையைப் பெற விண்ணப்பித்திருந்தாா். இந்த மானியத் தொகையை வழங்க கோபி மீன் வளா்ச்சித் துறை ஆய்வாளரான பவானிசாகரை சோ்ந்த அருள்ராஜ் (47) ரூ. 31 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா். இந்தத் தொகையை காா்த்திக் வழங்கியபோது மறைந்திருந்த ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாா் அருள்ராஜை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.