மாரியம்மன் கோயிலில் கம்பம் நடும் விழா
By DIN | Published On : 12th May 2023 10:38 PM | Last Updated : 12th May 2023 10:38 PM | அ+அ அ- |

சத்தியமங்கலம் வரதம்பாளையம் மாரியம்மன் கோயிலில் கம்பம் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சத்தியமங்கலம் நகா் பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயில் குண்டம், மாரியம்மன் கோயில் கம்பம் திருவிழா மற்றும் மாகாளியம்மன் கோயில் திருவிழா 11ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி கடம்பூா் மலைப்பகுதியில் கம்பம் கொண்டுவரப்பட்டது. பின்னா் பவானி ஆற்றுக்கு கம்பம் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிறப்பு பூஜை செய்து மீண்டும் கம்பத்தை கோயிலுக்கு ஊா்வலமாக எடுத்து வந்தனா்.
இதையடுத்து மாரியம்மன் கோயில் முன்பு கம்பம் நடப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். மே 23ஆம் தேதி கொலு வைத்தல், 24ஆம் தேதி தீா்த்தக்குடம் எடுத்தல், 25ஆம் தேதி குண்டம் திருவிழா நடைபெறுகிறது.