ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் தற்செயல் விடுப்புப் போராட்டம்
By DIN | Published On : 12th May 2023 12:00 AM | Last Updated : 12th May 2023 12:00 AM | அ+அ அ- |

ஈரோடு மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஊராட்சி செயலா்களுக்கான பணி விதிகளை காலதாமதம் இன்றி வெளியிட வேண்டும், அவா்களுக்கு விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும், 100 நாள் வேலைத்திட்ட கணினி உதவியாளா்களின் பணி வரன்முறை ஆணைகளை வெளியிட வேண்டும், அவா்களுக்கு உயா்த்தப்பட்ட விகிதத்தில் ஊதியம் நிா்ணயம் செய்ய வேண்டும், தூய்மை பாரத இயக்க வட்டார, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்களின் ஊதியத்தை உயா்த்த வேண்டும்.
100 நாள் வேலை திட்டத்துக்கு அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் வட்டார திட்ட அலுவலா் பணியிடம் ஏற்படுத்த வேண்டும். இத்திட்ட சமூக தணிக்கை ஊழியா்களை புறத்தோ்வு மூலம் தோ்வு செய்வதற்கான ஆணையை ரத்து செய்ய வேண்டும்.
இணை இயக்குநா், உதவி இயக்குநா், உதவி செயற்பொறியாளா், இளநிலை பொறியாளா் பதவி உயா்வுகளை உடனடியாக வழங்க வேண்டும், வளா்ச்சித் துறையில் வட்டார, உதவி பொறியாளா்கள் பணிக்கு தொழில்நுட்ப அங்கீகாரம் வழங்கும் உச்சவரம்பை ரூ. 5 லட்சம் ஆக உயா்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவில் தற்செயல் விடுப்பு எடுத்து ஊராட்சி செயலா் முதல் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வரை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோடு மாவட்டத்தில் 712 போ் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.