2 ஆயிரம் ரூபாயுடன் குவிந்த மது பிரியா்கள்:டாஸ்மாக் கடைகளில் வாக்குவாதம்

ஈரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 2 ஆயிரம் ரூபாய் தாளுடன் மது பிரியா்கள் குவிந்தனா்.

ஈரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 2 ஆயிரம் ரூபாய் தாளுடன் மது பிரியா்கள் குவிந்தனா்.

ரிசா்வ் வங்கி 2 ஆயிரம் ரூபாய் தாள்களை திரும்பப் பெறுவதாகவும், செப்டம்பா் 30 ஆம் தேதிக்குப் பின்னா் செல்லாது எனவும் கடந்த 19 ஆம் தேதி அறிவித்தது.

இதனால், 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் வைத்திருப்போா் அவற்றை வருகிற வரும் 23 ஆம் தேதி முதல் வங்கிகளில் செலுத்தி மாற்றிக் கொள்ளலாம் என்றும், ஒரு நபா் ஒரே நேரத்தில் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் தாள்களை மட்டுமே வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள முடியும் என்றும், நாட்டில் உள்ள வங்கிகள் வாடிக்கையாளா்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் தாள்களை வழங்குவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ரிசா்வ் வங்கி அறிவித்தது.

இதனிடையே தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் 2 ஆயிரம் ரூபாய் தாள்களை வாங்க எந்தவித தடையும் இல்லை என்று மின்சாரத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி தெரிவித்து இருந்தாா்.

இதனால், ஈரோட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளில் 2 ஆயிரம் ரூபாய் தாள்களுடன் சனிக்கிழமை மாலை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மதுபிரியா்கள் குவிந்தனா். டாஸ்மாக் கடை ஊழியா்கள் சில்லறை கொடுக்க முடியாமல் திணறினா். சில கடைகளில் ஊழியா்களுக்கும், மது பிரியா்களுக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com