மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தக் கோரிக்கை

100 நாள் வேலைத் திட்டத்தில் ஏரி, குளங்களில் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

100 நாள் வேலைத் திட்டத்தில் ஏரி, குளங்களில் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போதிய மழை இல்லாத நிலையில், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் நோக்கத்தில் மத்திய அரசால் கடந்த 2006 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது 100 நாள் வேலை திட்டம். இந்த திட்டம் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பையும், வருமானத்தையும் உறுதி செய்தாலும், சமுதாயத்துக்கு பயனற்ற திட்டமாகவே இருந்தது.

இந்நிலையில், அரசு நிலங்கள், சாலையோரங்கள், ஏரி, குளக்கரைகளில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கும் பணி இந்த திட்டத்தின்கீழ் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம் அதன்பிறகு நிறுத்தப்பட்டது. இவ்வாறு நடப்பட்ட கன்றுகளில் 25 முதல் 30 சதவீதம் கன்றுகள் இப்போது நன்கு வளா்ந்துள்ளன.

கிராமப் பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான ஏரி, குளங்களில் சீமைக்கருவேல மரக்கன்றுகளை அகற்றிவிட்டு படிப்படியாக வேறு மரக்கன்றுகள் நட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்டம், அந்தியூா் வட்டம் சென்னம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராஜேஷ்வரன் கூறியதாவது: 100 நாள் வேலைத் திட்டம், தெரு தூய்மைப் பணிகளில் நிதி பல ஆண்டுகளாக வீணடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்தான் கடந்த சில ஆண்டுகளாக குளத்தை தூா் வாருவது, சாலையோரங்கள், ஏரி, குளக்கரைகள், வரத்து வாய்க்கால் கரைகளில் மரக்கன்றுகள் நட்டு வளா்ப்பது என்று பசுமை பணிகளில் தொழிலாளா்கள் களமிறக்கப்பட்டனா்.

கடந்த 2016 முதல் 2019 வரை 100 நாள் வேலைத் திட்டத்தில் சுமாா் 1 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், 30 சதவீதம் கன்றுகள் காப்பாற்றப்பட்டுள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும்.

ஜூன் மாதத்தில் தென்மேற்குப் பருவ மழை தொடங்க வாய்ப்புள்ளதால், மரக்கன்றுகள் நடுவதற்கு ஏரி, குளங்களை உடனடியாக தோ்வு செய்து ஜூலை மாதம் முதல் மரக்கன்றுகளை நடும் பணியைத் தொடங்க ஊரக வளா்ச்சித் துறை நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com