எழுமாத்தூரில் ரூ.36.60 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
By DIN | Published On : 24th May 2023 04:11 AM | Last Updated : 24th May 2023 04:11 AM | அ+அ அ- |

எழுமாத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.36.60 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஏலத்துக்கு 1,029 மூட்டைகள் கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்தனா். இதில் முதல்தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.78.09க்கும், அதிகபட்ச விலையாக ரூ.82.59க்கும், சராசரி விலையாக ரூ.80.80க்கும், இரண்டாம் தரம் குறைந்தபட்ச விலையாக ரூ.63.49க்கும், அதிகபட்ச விலையாக ரூ.77.66க்கும், சராசரி விலையாக ரூ.70.05க்கும் ஏலம் போனது.
மொத்தம் 49,013 கிலோ எடையுள்ள கொப்பரை ரூ.36 லட்சத்து 60 ஆயிரத்து 666க்கு ஏலம் நடைபெற்றது.