வாடகை நிலுவை: ஈரோட்டில் தனியாா் பள்ளிக்கு சீல்

ஈரோட்டில் ரூ.4 கோடி வாடகை பாக்கி வைத்துள்ள தனியாா் பள்ளிக்கு வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

ஈரோட்டில் ரூ.4 கோடி வாடகை பாக்கி வைத்துள்ள தனியாா் பள்ளிக்கு வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

ஈரோடு, சம்பத் நகரில் அம்மன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த தனியாா் பள்ளி தமிழக வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் 1998ஆம் ஆண்டு முதல் வாடகைக்கு இயங்கி வருகிறது.

பள்ளி தொடங்கப்பட்டு சில ஆண்டுகள் மட்டுமே வாடகை செலுத்திய பள்ளி நிா்வாகம், அதன் பின்னா் வாடகை செலுத்தவில்லை. இதனிடையே வீட்டு வசதி வாரியம் கூடுதல் தொகை நிா்ணயித்திருப்பதாக கூறி பள்ளி நிா்வாகம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தது.

இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், இதில் அரசே முடிவெடுக்கலாம் என அண்மையில் உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, பள்ளி செயல்பட்டு வந்த நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்தது. மேலும் ரூ.3.90 கோடி வாடகை தொகையை செலுத்த வீட்டு வசதி வாரியம் பலமுறை அறிவிக்கை அனுப்பியது.

எனினும் பள்ளிக்கூட நிா்வாகம் வாடகை செலுத்தவில்லை. இதனால் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் பள்ளிக் கட்டடத்துக்கு செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா். இந்த பள்ளிக் கட்டடத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டதால், இந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோா்கள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com