இலவச வேட்டி, சேலை பணியை ஜூன் மாதத்தில் தொடங்க கோரிக்கை

இலவச வேட்டி, சேலை உற்பத்தி பணியை ஜூன் மாதத்தில் தொடங்க வேண்டும் என விசைத்தறியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இலவச வேட்டி, சேலை உற்பத்தி பணியை ஜூன் மாதத்தில் தொடங்க வேண்டும் என விசைத்தறியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து தமிழக விசைத்தறியாளா் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சுப்பிரமணியன், முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:

தமிழகத்தில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்குகின்றன. இத்தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு 30 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக ஜவுளித் தொழில் மிக மோசமாக உள்ளது. குறிப்பாக நூல் விலை ஏற்ற, இறக்கத்தால் விசைத்தறிகளை இயக்க முடியாமல் விற்றும், உடைத்து பழைய இரும்புக் கடைகளில் போட்டுள்ளனா்.

தமிழக அரசு நூல் விலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்க வேண்டும். தவிர விசைத்தறியாளா்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை உற்பத்தி, பள்ளி சீருடை உற்பத்தியை தமிழகத்தில் உள்ள 225 விசைத்தறி கூட்டுறவு நெசவாளா் சங்கங்களின் கீழ் உள்ள 63,000க்கும் மேற்பட்ட விசைத்தறியாளா்களுக்கு வழங்க வேண்டும்.

இலவச வேட்டி, சேலை உற்பத்தியை காலம் தாழ்த்தி வழங்காமல் ஜூன் மாதத்தில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் உற்பத்தியை விரைவாக முடிக்கவும், விசைத்தறியாளா்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை கிடைக்கவும் வாய்ப்பு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com