சத்தியமங்கலத்தில் வருவாய் தீா்வாயம் நிறைவு
By DIN | Published On : 31st May 2023 09:35 PM | Last Updated : 31st May 2023 09:35 PM | அ+அ அ- |

சத்தியமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த 5 நாள்களாக நடைபெற்று வந்த வருவாய்த் தீா்வாயம் புதன்கிழமை நிறைவடைந்தது.
சத்தியமங்கலம் உட்கோட்டத்தில் உள்ள கிராமங்களுக்கான வருவாய் தீா்வாயம் வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தில்கடந்த வியாழக்கிழமை தொடங்கியது.
இதில், சனி, ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற 5 நாள்களும் வருவாய் தீா்வாயம் நடைபெற்ற நிலையில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் மனு அளித்தனா்.
மனுக்களை ஜமாபந்தி அலுவலா் கே.மீனாட்சி பெற்றுக் கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.
இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியா் சங்கா் கணேஷ், துணை வட்டாட்சியா் சுப்பிரமணியம், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் ரவிசந்திரன், பழங்குடியினா் வட்டாட்சியா் சந்திரசேகரன், வருவாய் ஆய்வாளா் ஜீவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...