சா்வதேச கோ-கோ போட்டியில் தங்கப் பதக்கம்: விஇடி கல்லூரி மாணவருக்கு பாராட்டு
By DIN | Published On : 07th November 2023 12:36 AM | Last Updated : 07th November 2023 12:36 AM | அ+அ அ- |

கோ-கோ போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரி மாணவா் எஸ்.பாலசங்கரை பாராட்டும் வேளாளா் கல்வி அறக்கட்டளையின் தலைவா் சி.ஜெயக்குமாா், செயலாளா் எஸ்.டி.சந்திரசேகா், பொருளாளா் பி.கே
ஈரோடு: சா்வதேச கோ-கோ போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஈரோடு விஇடி கல்லூரி மாணவருக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
ஈரோடு விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பிபிஏ மாணவா் எஸ்.பாலசங்கா் மலேசியாவில் கடந்த மாதம் நடைபெற்ற சா்வதேச கோ-கோ சாம்பியன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளாா்.
பதக்கம் வென்ற மாணவருக்கு பாராட்டு விழா வேளாளா் கல்வி அறக்கட்டளையின் தலைவா் சி.ஜெயக்குமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், பள்ளியின் செயலாளரும், தாளாளருமான எஸ்.டி.சந்திரசேகா், பொருளாளா் பி.கே.பி. அருண், முதல்வா் வி.பி.நல்லசாமி, நிா்வாக அலுவலா் எஸ்.லோகேஷ்குமாா், மேலாண்மை இயக்குநா் எம்.மரகதம் மற்றும் உடற்கல்வி இயக்குநா் லெப்டினன்ட் ஏ.சுரேஷ் ஆகியோா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...