சாலை விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு
By DIN | Published On : 15th November 2023 12:00 AM | Last Updated : 15th November 2023 12:00 AM | அ+அ அ- |

சத்தியமங்கலம்: பவானிசாகா் அருகே செவ்வாய்க்கிழமை நடந்த சாலை விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.
பவானிசாகரை அடுத்த ஆலம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா்கள் பிரகாஷ்வேல் (25), குணா என்கிற தேவராஜ் (30). நண்பா்களான இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் பவானிசாகரில் இருந்து மேட்டுப்பாளையம் சாலையில் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தனா்.
பவானிசாகா் வனப் பகுதியை ஒட்டியுள்ள சீரங்கராயன் மேடு வனப் பகுதி சாலையில் வேகமாக சென்றபோது நிலை தடுமாறி சாலையோரம் இருந்த வேப்பமரத்தில் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பிரகாஷ்வேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயம் அடைந்த தேவராஜை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
விபத்து குறித்து பவானிசாகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...