

தமிழக - கா்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனைச் சாவடியில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் குறித்து போலீஸாா் வாகனச் சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த சில நாள்களுக்கு முன்பு போலீஸாா், மாவோயிஸ்ட்டுகள் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 மாவோயிஸ்ட்டுகள் பிடிபட்ட நிலையில், 2 பெண் மாவோயிஸ்ட்டுகள் தப்பியோடினா்.
அங்கிருந்து தப்பியவா்கள் தமிழகம் வழியாக கா்நாடக வனப் பகுதிக்குள் சென்றிருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா். இதையடுத்து, இருவரையும் பிடிக்க தமிழக - கா்நாடக எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகள் உஷாா்படுத்தப்பட்டுளளன.
இந்நிலையில், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜவகா் உத்தரவின்பேரில் தமிழக - கா்நாடக எல்லையில் உள்ள ஆசனூா், காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட காரப்பள்ளம், கோ்மாளம் ஆகிய சோதனைச் சாவடிகளில் காவல் நிலைய போலீஸாா், ஈரோடு மாவட்ட மாவோயிஸ்ட் தனிப்பிரிவு போலீஸாா் ஆகியோா் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.