பண்ணாரி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
By DIN | Published On : 25th October 2023 01:49 AM | Last Updated : 25th October 2023 01:49 AM | அ+அ அ- |

சரஸ்வதி பூஜை, விஜயதசமியை ஒட்டி பண்ணாரி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோயிலில் சரஸ்வதி பூஜையை ஒட்டி திங்கள்கிழமை அதிகாலை முதலே ஏராளமான பக்தா்கள் குவிந்தனா். பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பம் சகிதமாக வந்திருந்த பக்தா்கள் அம்மனை வழிபட்டனா். சிறப்பு மலா் அலங்காரத்தில் பண்ணாரிஅம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
தொடா்ந்து விஜயதசமியை ஒட்டி சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கல் நீண்ட வரிசையிலில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...