வேளாளா் வித்யாலயா பள்ளியில் விளையாட்டு விழா
By DIN | Published On : 25th October 2023 01:48 AM | Last Updated : 25th October 2023 01:48 AM | அ+அ அ- |

ஈரோடு வேளாளா் வித்யாலயா சீனியா் செகண்டரி பள்ளியில் விளையாட்டு தின விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு வேளாளா் கல்வி அறக்கட்டளைத் தலைவா் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். தாளாளா் சந்திரசேகா் முன்னிலை வகித்து, போட்டிகளைத் தொடங்கிவைத்தாா். இதில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பள்ளி முதல்வா் பிரியதா்ஷினி ஆண்டறிக்கை வாசித்தாா். வேளாளா் கல்வி அறக்கட்டளை ஆலோசகா் பாலசுப்ரமணியம், யுவராஜா, பள்ளியின் முதன்மை முதல்வா் நல்லப்பன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
விழாவில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த முதல்வா்கள், மக்கள் தொடா்பு அலுவலா் காா்த்திகேயன், ஆசிரியா்கள், பணியாளா்கள், பெற்றோா்கள், மாணவா்கள் பங்கேற்றனா். துணை முதல்வா் மஞ்சுளா நன்றி கூறினாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...