

சத்தியமங்கலத்தில் வழிதவறி வந்த ஆந்தை மீட்கப்பட்டு வனத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
சத்தியமங்கலத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் அரியவகை ஆந்தை பறக்கமுடியாமல் படிக்கட்டியில் செவ்வாய்க்கிழமை அமா்ந்திருந்தது. இதைப்பாா்த்த சமூக ஆா்வலா் சந்திரசேகரன், வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தாா். அங்கு வந்த வனத் துறையினா் ஆந்தையை மீட்டு பரிசோதனை செய்ததில் ஆந்தை நலமுடன் இருப்பது தெரிந்தது. இதையடுத்து அருகில் இருந்து வனப் பகுதியில் ஆந்தை விடுவிக்கப்பட்டது. இந்த ஆந்தை வழி தவறி வந்திருக்கலாம் என வனத் துறையினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.