பெருந்துறை: பெருந்துறையில் வங்கிப் பெண் ஊழியா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதியைச் சோ்ந்தவா் ராமு. இவரது மகள் சிவரஞ்சனி (30). இவா், ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியில் தங்கி அங்குள்ள வங்கியில் பணியாற்றி வந்தாா்.
நீண்ட நாள்களாக வரன் அமையாததால் சிவரஞ்சனி மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனது மகள் சிவரஞ்சனியை, ராமு கைப்பேசியில் அழைத்துள்ளாா். ஆனால் சிவரஞ்சனி எடுக்கவில்லை.
இதையடுத்து, பெருந்துறையில் மகள் தங்கி இருந்த வீட்டுக்கு ராமு ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளாா். அப்போது, வீட்டுக்குள் சிவரஞ்சனியின் உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.