

பெருந்துறை, கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி, நாட்டு நலப்பணித் திட்டம், ஈரோடு நடுநகா் அரிமா சங்கம் மற்றும் பெருந்துறை அரசு மருத்துவமனை சாா்பில் கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, கொங்கு பாலிடெக்னிக் கல்லூரித் தாளாளா் வெங்கடாசலம் தலைமை வகித்தாா். பெருந்துறை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் சாந்தி முகாமை தொடங்கிவைத்தாா். கல்லூரி முதல்வா் வேதகிரி ஈஸ்வரன் முன்னிலை வகித்தாா். முகாமில் 101 யூனிட் ரத்தம் பெறப்பட்டது.
இதில், கல்லூரி துணை முதல்வா் செந்தில்குமாா், ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள், ஈரோடு நடுநகா் அரிமா சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.