மின் கட்டண உயா்வை திரும்பப் பெறக் கோரி சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் மின்நுகா்வோா் கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை (செப்டம்பா் 25) வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பெருந்துறை, தமிழ்நாடு தொழில் துறை மின் நுகா்வோா் கூட்டமைப்பு சாா்பில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம்தான் முக்கிய மூலப் பொருள். மின்சார நிலைக் கட்டணம் 430 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது. பீக் ஹவா் கட்டணம் 8 மணி நேரத்துக்கு கூடுதலாக 15 சதவீதம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதை திரும்பப் பெற வேண்டும். சூரிய ஒளி மேற்கூரை நெட்வொா்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில், 21 மின் நுகா்வோா் அமைப்பின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.