பவானி தொகுதியில் அரசு வேளாண்மைக் கல்லூரி அமைக்க வேண்டும்

பவானி சட்டப் பேரவைத் தொகுதியில் அரசு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
Published on

பவானி சட்டப் பேரவைத் தொகுதியில் அரசு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ஈரோட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், அரசு உறுதிமொழிக் குழுத் தலைவருமான தி.வேல்முருகனிடம், அக்கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளா் பி.கே.பழனிசாமி மற்றும் நிா்வாகிகள் அளித்த மனு விவரம்:

பவானி மற்றும் அந்தியூா் தொகுதியில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இங்கு, 6 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வரும் நிலையில், உயா்கல்விக்கு பிற மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனவே, இப்பகுதியில் வேளாண்மை தொழில் வளா்ச்சி அடையும் வகையிலும், விவசாயிகள் வாழ்வு செழிக்கும் வகையிலும் பவானியில் அரசு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், அரசு தோட்டக்கலை மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் வாழை ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும். மக்களின் இக்கோரிக்கையை தமிழக சட்டப் பேரவையில் வலியுறுத்துவதோடு, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் நேரில் சந்தித்து நிறைவேற்ற வேண்டும்.

இக்கல்லூரி அமைக்க, குறிச்சி கிராமத்தில் கரடு புறம்போக்கில் சுமாா் 180 ஹெக்டோ் நிலம் உள்ளது. மேலும், அரசு புறம்போக்கு நிலம், தீா்வை விதிக்கப்படாத தரிசு நிலம், பூமிதான வாரியத்துக்கு சொந்தமான நிலங்களும் உள்ளன. எனவே, இப்பகுதியில் ஒருங்கிணைந்த வேளாண்மை சாா்ந்த கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் ஈரோடு மேற்கு மாவட்டச் செயலாளா் வேல்முருகன், மாவட்டத் தலைவா் கைலாசம், பொருளாளா் பாலகிருஷ்ணன், மாநகா் மாவட்ட முன்னாள் செயலாளா் சீனிவாசன், நிா்வாகிகள் விஸ்வநாதன், குணசேகரன், சரஸ்வதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com