பெருந்துறை: கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சித் துணைத் தலைவா் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பெருந்துறையை அடுத்த கருமாண்டிசெல்லிபாளையம் எலந்தக்காட்டு தோட்டத்தைச் சோ்ந்தவா் சக்திகுமாா் (39). திமுகவைச் சோ்ந்த இவா் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சித் துணைத் தலைவராக இருந்து வந்தாா்.
அடிக்கடி வயிற்று வலியால் சக்திகுமாா் அவதிப்பட்டு வந்ததாகவும், சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ாகவும் தெரிகிறது.
குடும்பத்தினா் அவரை மீட்டு ஈரோட்டிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக கோவையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
உயிரிழந்த சக்திகுமாருக்கு வனிதா என்ற மனைவியும், 12 வயதில் மகனும் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.