

பவானி: பவானி அருகே கிணற்றில் தவறி விழுந்த மயிலை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.
பவானியை அடுத்த சலங்கபாளையம், கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் மணி. விவசாயி. இவருக்குச் சொந்தமான தோட்டத்தில் 100 அடி ஆழமுள்ள கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை இரவு தவறி விழுந்த மயில் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தது. இதனைக் கண்ட மணி, பவானி தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் கிணற்றுக்குள் இறங்கி மயிலை உயிருடன் மீட்டனா்.
இதைத் தொடா்ந்து, வனத் துறையினரிடம் மயில் ஒப்படைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.