தெங்குமரஹாடா கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

தெங்குமரஹாடா கூட்டுறவு சங்க அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தெங்குமரஹாடா கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
தெங்குமரஹாடா கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
Updated on
1 min read


சத்தியமங்கலம்: தெங்குமரஹாடா கூட்டுறவு சங்க அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த தெங்குமரஹாடா வனக் கிராமத்தில் வாழும் ஆதிவாசிகள் அல்லாத 495 குடும்பத்தினரை பவானிசாகரில் மறுகுடியமா்வு செய்ய உயா்நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு மாவட்ட நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

இதற்காக பவானிசாகரில் வருவாய் நிலங்கள் ஒதுக்கீடு செய்து ஒரு குடும்பத்துக்கு இரண்டரை செண்ட் வீட்டுமனை மற்றும் ரூ.15 லட்சம் ரொக்கம் ஆகியவை இழப்பீடாக வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், உயா்நீதிமன்ற உத்தரவுப்படி தெங்குமரஹாடா பண்ணை கூட்டுறவு சங்கம் மற்றும் தெங்குமரஹாடா தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் சாா்பில் மறுகுடியமா்வு குறித்த சிறப்பு பொது பேரவைக் கூட்டத்துக்கு திங்கள்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் அல்லிமாயாறு, தெங்குமரஹாடா, சித்தராம்பட்டி கல்லாம்பாளையம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

அப்போது, மறுகுடியமா்வு குறித்து செயலாட்சியா் ஆனந்தன் முன்னிலையில் கருத்து கேட்கப்பட்டது. பெரும்பாலன மக்கள் மறுகுடியமா்வுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், கூட்டுறவு சங்க அதிகாரிகள் மறுகுடியமா்வுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்தனா்.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள், செயலாட்சியா் ஆனந்தன் அலுவலக அறையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com