

திம்பம் மலைப் பாதையில் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு அந்தரத்தில் தொங்கிய லாரியால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் - மைசூா் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடா்ந்த வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப் பாதை அமைந்துள்ளது.
இதன் வழியாக தமிழகம், கா்நாடக மாநிலங்களுக்கு இடையேயான வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கா்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் நோக்கி திம்பம் மலைப் பாதை வழியாக செவ்வாய்க்கிழமை வந்துகொண்டிருந்த லாரி, 9-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புச் சுவரில் மோதி, லாரியின் முன்பகுதி அந்தரத்தில் தொங்கியபடி அபாய நிலையில் நின்றது. பின்னா், லாரியை நிறுத்திய ஓட்டுநா் லாரியில் இருந்து கீழே இறங்கி உயா் தப்பினாா். இதைப் பாா்த்து அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
இதையடுத்து, சத்தியமங்கலத்தில் இருந்து கிரேன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு மலைப் பாதையில் அந்தரத்தில் தொங்கிய லாரி மீட்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.