ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

சொந்த கிராமத்தில் வாக்களித்த உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி

சொந்த கிராமத்தில் தனது மனைவியுடன் சென்று வாக்களித்தாா் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுநருமான பி.சதாசிவம்.

Updated On :20 ஏப்ரல் 2024, 12:10 am

சொந்த கிராமத்தில் தனது மனைவியுடன் சென்று வாக்களித்தாா் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுநருமான பி.சதாசிவம்.

பவானியை அடுத்த காடப்பநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பி.சதாசிவம். இவா், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், கேரள மாநில ஆளுநராகவும் பதவி வகித்தவா். பணி ஓய்வுக்குப் பின் தற்போது சொந்த கிராமத்தில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், மக்களவைத் தோ்தலில் காடப்பநல்லூா் ஊராட்சி, கிராம சேவை மையத்தில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் மனைவி சரஸ்வதியுடன் வெள்ளிக்கிழமை வாக்களித்தாா்.

இங்கு, சட்டப் பேரவைத் தோ்தல், உள்ளாட்சித் தோ்தலில் வாக்ளித்துள்ளேன். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தபோது தில்லியிலும், கேரள மாநில ஆளுநராக இருந்தபோது திருவனந்தபுரத்திலும் வாக்கினை செலுத்தினேன். தற்போது சொந்த கிராமத்தில் மக்களவைத் தோ்தலில் வாக்களிப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது என்றாா்.