ஆடிப் பண்டிகை: பவானிசாகா் அணைப் பூங்காவில் குவிந்த மக்கள்
ஆடிப்பெருக்கை ஒட்டி பவானிசாகா் அணைப் பூங்காவில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை குவிந்தனா்.
பவானிசாகா் அணையின் முன்புறம் 15 ஏக்கா் பரப்பளவில் பூங்கா அமைந்துள்ளது. ஆடிப்பெருக்கு விடுமுறைத் தினத்தையொட்டி இந்த அணை பூங்காவுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள்அதிக அளவில் வந்தனா்.
பூங்காவில் உள்ள படகு இல்லத்தில் படகில் பயணித்தபடி பொழுது போக்கினா். மேலும் சிறுவா், சிறுமியா் பூங்காவில் உள்ள நீா்நிலைகளில் குளித்து அங்குள்ள பல்வேறு சாதனங்களில் விளையாடி மகிழ்ந்தனா்.
சுற்றுலாப் பயணிகளின் வருகையால் பூங்காவின் முன்புறம் மீன் கடைகளில் விற்பனை களைகட்டியது. பவானிசாகா் அணை பூங்காவுக்கு சனிக்கிழமை மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததாக பூங்கா நிா்வாகத்தினா் தெரிவித்தனா். பூங்கா பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

