காயமடைந்து பறக்க முடியாமல்  தவித்த மயிலை மீட்ட வனத் துறையினா்.
ஈரோடு
காயமடைந்து பறக்க முடியாமல் தவித்த ஆண் மயில் மீட்பு
 பவானி ஆற்றின் கரையோரத்தில் புதருக்குள் சிக்கி பறக்க முடியாமல் தவித்த ஆண் மயிலை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை மீட்டனா். 
பவானி ஆற்றின் கரையோரத்தில் புதருக்குள் சிக்கி பறக்க முடியாமல் தவித்த ஆண் மயிலை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.
பவானியை அடுத்த பெரியமோளபாளையத்தில் பவானி ஆற்றின் கரையோரத்தில் இருந்த புதருக்குள் ஆண் மயில் சிக்கி தவித்துக்கொண்டிப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் அந்தியூா் வனத் துறையினருக்கு தகவல் அளித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் பொதுமக்கள் உதவியுடன் மயிலைப் பாதுகாப்பாக மீட்டனா். அப்போது, காலில் காயம் ஏற்பட்டதால் மயில் பறக்கமுடியாமல் தவித்துக்கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அந்தியூா் வனத் துறை அலுவலகத்துக்கு மயிலைக் கொண்டுசென்றனா்.

